காவல் கோட்டம் நாவலுக்கு வருது வாங்கப்பட்டதை தொடர்ந்து என் சினிமா நண்பர்கள் பலர் இது தொடர்பாக இன்னும் பல புதிய தகவல்களை தந்து என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார்கள். அதனை ஒரு விரிவான பதிவாக எழுதவுள்ளேன், இந்த நேரத்தில் இதனை வாசித்து ஒரு பெரும் விவாதத்தை ஏற்படுத்திய இலக்க்கிய வாசகர்கள் அனைவருக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன், நம் நோக்கம் ஒரு விவாதத்தை உருவாக்குவதே.
விவாதத்தை தொடர்ந்து கு.சின்னப்பாரதி அவர்கள் இந்த ஆண்டு விருதுக்கு தடை வாங்க நீதிமன்றத்துக்கு செல்ல ஆலோசித்ததாகவும் அதனை சிபிஎம் கட்சி மிக பலமாக தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் வெளிவருகிறது.
இந்த காலச்சூழலில் எனக்கு சில சுட்டிகளை யாரோ அனுப்பிவைத்திருக்கிறார்கள், அது இன்னும் இந்த உரையாடலை அடுத்து கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்த சுட்டிகளை இங்கே தருகிறேன்
http://www.mathavaraj.com/2012/02/blog-post_11.html
http://www.mathavaraj.com/2012/02/2.html
இது தவிர ஞாநி இந்த வார கல்கியில் எழுதிய பதிவு அனைவரும் வாசிக்க வேண்டியதே, அவரது பத்தி இணையத்தில் இன்னும் பதிவேற்றப்படவில்லை, இருந்தால் இங்கு அதனை வாசகர்கள் அனுப்பிவைக்கவும்.
மாதவராஜ் மற்றும் ஞாநி அவர்களுக்கு இந்த காலகட்டத்தில் மனசாட்சியின் குரலாக ஒலித்தமைக்கு கூடுதல் நன்றிகள்.
No comments:
Post a Comment