Monday, 13 February 2012

PLAGIARISM என்றால் என்ன?



 சத்தியநாத ஐயரின் மதுரை நாயக்கர் வரலாறு புத்தகத்தின் பல பக்கங்கள் தமிழாக்கப்பட்டு  (யாரால்??) அப்படியே முழுமையாக காவல் கோட்டம் நாவலில் கோர்க்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு சத்தியநாத ஐயரின் புத்தகத்தில் மதுரையை ஆண்ட ராணி மீனாட்சி பற்றிய பகுதியிது.

Minakshi negotiated with the latter with a view to nullifying the arrangements agreed upon, in return for, it is said, one crore of rupees. Chanda Sahib consented to her terms, and is said to have sworn by the Koran to safeguard her interests at any cost. He did not scruple to break his solemn vow, and imprison Mlnakshi in her palace. The latter's miseries overwhelmed her, and she put an end to her own life by taking poison.

History Of The Nayaks Of Madura- R Sathianathaier  -  Page 254

காவல் கோட்டம
நாவலின் முப்பதாவது அத்யாயம் பக்கம் 255ல் இதே விஷயம் எப்படியிருக்கிறது பாருங்கள்

மீனாட்சி ஒப்புக் கொண்டாள். ஆனால் பங்காரு ஒப்புக் கொள்ளாமல் திருச்சியின் மீது படை எடுத்தார். சாந்தா சாகிப்பின் உதவியை நாடி பணம் கொடுத்தார். அதை விட அதிகமான பணத்தை மீனாட்சி தந்தபோது மீனாட்சியை அரசியாக ஏற்பதாகவும் படை உதவி செய்வதாகவும் குரானின் மீது சத்தியம் செய்துதந்தார். 1736ல் சந்தா சாகிப் தனது படையை வலிமை படுத்திக் கொண்டு மீண்டும் திருச்சி வந்தார். நேசசக்தி என்பதால் வழிவிட்ட கோட்டைக்குள் புகுந்தபின்பு அரசி மீனாட்சியை சிறைப்படுத்திவிட்டு நிர்வாகத்தை கவனிக்கத் துவங்கினார். மீனாட்சி நஞ்சுக் குப்பியை எடுத்து திறந்து அப்படியே வாயில் கவிழ்த்துவிட்டாள். (பக்கம் 255.)

(பக்கம் நம்பர் கூட காப்பி அடிக்கப்பட்டுள்ளது)

வரலாற்று பாடப்புத்தகத்தில் உள்ளதை நகல் எடுத்திருப்பதைத் தவிர இந்த நாவலில் புதிதாக என்ன மாற்றத்தை எழுத்தாளர் உருவாக்கியிருக்கிறார் என்று புரியவில்லை.

இப்படியான தகவல்கள் பக்கம் 36, 37, 39, 47, 89,140,152, 213, 215, 218, 229, 246, 256, 259, 314, 279 பக்கங்களில் சரித்திர பாட புத்தகங்களில் இருந்து கட்டிங் பேஸ்டிங் வேலைகள் செய்து நிரப்பட்டுள்ளன.
(நன்றி - எஸ்.ராமகிருஷ்ணன்)

இதனை எல்லாம் மிக விரிவாக ஒருவர் ஆதாரங்களுடன் சொல்லியும் ஏன் இலக்கியவாதிகள் விவாதிக்க மறுக்கிறார்கள்.





No comments: