Saturday, 18 February 2012

வீரவாள் குறித்து ஞாநி

உளவியல் சிக்கலில் எழுத்தாளர்கள் இருப்பது உண்மைதான். பல எழுத்தாளர்கள் இப்போது பாராட்டுவிழாக்கள், வெளியீட்டு விழாக்களை பிரும்மாண்டமாகவும் கட் அவுட், ப்ளெக்ஸ் பலகைகளோடும், சினிமா மீடியா பிரபலங்களின் ஆசியோடும் நடத்துவது என்பது வாடிக்கையாகிவிட்டது. மதுரையில் வெங்கடேசனுக்கு நடத்திய பாராட்டில் மலர் கிரீடம் சூட்ட்ப்பட்டு கையில் வீரவாள் தரப்பட்டதாக அதைக் கண்டித்து பெத்தானியாபுரம் முருகானந்தம் என்பவர் இணைய தளத்தில் எழுதியிருக்கிறார். ஒரு மார்க்சிஸ்ட் இப்படியெல்லாம் செய்யலாமா என்பது அவர் கேள்வி.

முழு பதிவுக்கு  www.gnani.net

நன்றி - ஞாநி/கல்கி

7 comments:

gnani said...

இதை மறுத்து தமிழ்ச்செல்வன் இன்று என்னுடன் பேசினார். நிகழ்ச்சிக்கு புரவலர்களாக இருந்தவர்களில் சிலர் மலர் கிரீடத்தை எடுத்துக் கொண்டு மேடைக்கு சென்றதாகவும், உடனே அதை வெஙக்டேசன் பறித்து அப்புறப்படுத்தியதாகவும்,பின்னர் பேசும்போது இப்படி மலர் கிரீடம் சூட்டுவதெல்லம மார்க்சிஸ்ட் பண்பாட்டுக்கு எதிரானது என்று கண்டித்ததாகவும் தமிழ் தெரிவிக்கிறார். வெங்கடேசன் மலர் கிரிடத்தை சூட்டிக் கொள்ளவில்லை என்கிறார். எனவே முருகான்ந்தம், உங்கள் குற்ரச்சாட்டுக்கு உங்கள் வசம் உள்ள ஆதாரம் என்ன? அதைத் தெரியப்படுத்தவும். ஞாநி

Bethaniyapuram Muruganandam said...

நான் அதை என் கண்களால் பார்த்திருகிறேன், நான் மட்டும் அல்ல மதுரையில் அந்த விழாவில் இருந்த 200 பேரும் சாட்சிதான். விஷ்யம் என்னவென்றால் மலர் கிரிடம் ஆர்டர் குடுத்தவர்களை சு.வெ வுக்கு தெரியும், வீரவாள் ஆர்டர் கொடுக்கபட்டதும் சு.வெ வுக்கு தெரியும், அதை அன்று வைக்கவிருக்கிறார்கள் என்பது உள்பட அவருக்கு தெரிந்தே நடந்தது, ஆனால் அன்று கிரிடத்தை வைத்த நண்பர்கள் விழா முடித்து வெளியே “ அது எப்படிங்க இப்படி வைக்க சொல்லிட்டு இது எல்லா கொஞ்சம் கூட பிடிக்காதா மாதிரியே மைக்க பிடிச்ச்சி பேசுறாரு“ என்று ஆச்சரிய பட்டார்கள், ஆதங்க பட்டார்கள்.

gnani said...

அப்படியானால் மலர் கிரீடம் சூட்டப்பட்டதா? அதை வெங்கடேசன் தடுக்க வில்லையா? அன்றைய நிகழ்வை புகைப்ப்டம் எடுத்தவர்களிடம் பட்ம இருக்கக் கூடுமே? முன்கூட்டியே வெங்கடேசனுக்குத் தெரியும் என்பதற்கு ஏது ஆதாரம் ? கிரீடத்தை வைத்த நண்பர் எவரேனும் பகிரங்கமாக உண்மை சொல்ல வருவாரா?

Maruthu Pandiyan - Madurai. said...

Dear Gnani Sir,
I was also present there during that flower crown and sword issue. The statement of Bethaniapuram Muruganandam is correct. As a soft skills trainer and motivational speaker, I would like to share my views regarding this. Mr Su. Vengatesan's body language was not appropriate and natural and he was trying to act like he don't need all that. But I myself is a witness of this action taken place. Kindly check with neutral people like me so that you can know the truth.
Maruthu Pandiyan, Madurai.

Unknown said...

ஞாநி அவர்கள் முதலில் இந்த விவகாரத்தில் தமிழ்செல்வன் அவர்களின் ஆலோசனையை கேட்பதை விடுத்து அன்று அங்கிருந்தவர்களை பார்வையாளர்களின் கூற்றுகளை கேட்க வேண்டும்.
இன்னும் சில விளக்கங்களுக்கு நீங்கள் மாதவராஜ் அவர்கள் எழுதியுள்ள மூன்று பதிவுகளை வாசிக்க வேண்டும்.

http://www.mathavaraj.com/2012/02/2.html

http://www.mathavaraj.com/2012/02/3.html

http://www.mathavaraj.com/2012/02/1.html

gnani said...

நான் தமிழ்செல்வனின் ஆலோசனையை போய் கேட்கவில்லை. கல்கியில் என் கட்டுரையைப்படித்துவிட்டு என் நண்பரான அவர் தொலைபேசி அவர் கருத்தைத் தெரிவித்தார். அது பற்றி இங்கே
கேட்டிருக்கிறேன். அவ்வளவுதான். ஏன் ஒருவராலும் வெங்கடேசன் மலர் கீரிடம் வீரவாளுடன் பொது நிகழ்ச்சியில் தோன்றியிருந்தால் அந்த புகைப்படத்தை வெளிக் கொணர முடியவில்லை என்று புரியவில்லை. திட்டமிட்டு அந்தப் படங்கள் அழிக்கப்பட்டுவிட்டனவா? அல்லது எடுக்கப்படவே இல்லையா?

Bethaniyapuram Muruganandam said...

நிச்சயம் இந்த நேரம் தடையங்களை அழிக்கபட்டிருக்கும், அதில் ஒரு சந்தைகமும் வேண்டாம்.